Articles by "தமிழ்நாடு"
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 


நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!

சென்னை: நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள விஜய் ஆண்டனியின்  வீட்டில் நேற்று இரவு மீரா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அண்ணாசாலையில் உள்ள தனியார் பள்ளியில் அவர் 12ஆம் வகுப்புப் படித்து வந்துள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி, குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். அவரது மகள் மீரா பள்ளியில் படித்து வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று இரவு உறங்கச் சென்றவர், படுக்கை அறையில் தற்கொலை செய்து கொண்டதை வீட்டின் பணியாளர் பார்த்து தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக மீரா காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.


 மாஸ் காட்ட நினைத்து..;மாவுகட்டு போட்டுக் கொண்ட மஞ்சள் வீரன்.....!

யூடியூபில் திடீரென, தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் விஸ்வரூபத்தை எடுத்தது. பலதரப்பட்ட சாமானிய மக்கள் தங்களது, திறமைகளையும் நகைச்சுவை உணர்வுகளையும் வெளி காட்டி சப்ஸ்கிரைப் பெற்று , பணம் சம்பாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் பைக் ரைடராக தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டு youtube சேனலை உருவாக்கி வளம் வந்து கொண்டிருப்பவர் தான் TTF வாசன். TTF வாசனின் யூடியூப் சேனலை பார்க்க ஒரு ரசிகர் கூட்டம் ஆனது இருக்கிறது.

பெரும்பாலானோர், 2கே கிட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தனது ரசிகர்களை சந்திப்பதற்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட 2கே கிட்ஸ் அந்த சந்திப்பு கூட்டத்திற்கு வருகை தந்தது சர்ச்சை ஆனதால், அனைவர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் TTF வாசன்.

பின்னர் யூடியூப் சேனலுக்கு இண்டர்வியூ கொடுக்க துவங்கி தொடர்ந்து தனது வாய் பேச்சாலும், களத்தில் ஏடா கூடமாக ஏதாவது செய்வதிலும், சர்ச்சையில் சிக்கி வந்தார் வாசன். அதிவேகமாக வாகனத்தை இயக்கி போலீசில் சிக்கிக்கொள்வது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

அதேபோல ஒரு முறை youtube பிரபலமான ஜி.பி முத்துவை வாகனத்தில் ஏற்றி சென்று, அதிவேகமாக சென்ற வழக்கிலும் சிக்கினார். வாசன் காவல் நிலையத்திற்கு செல்லும் பொழுதுகூட மாஸ் பிஜிஎம் போட்டுக்கொண்டு, கோட் சூட் உடன் சென்று வருவது என அலப்பறைக்கு பஞ்சம் இல்லாமல், தன்னை பிரபலப்படுத்தி கொள்பவர் வாசன்.

இந்தநிலையில், தனது அடுத்த கட்ட பரிமாணத்தை நோக்கி நகர ஆரம்பித்த வாசன். சினிமாவில் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் நடக்க இருப்பதாகவும், அதன் பெயர் மஞ்சள் வீரன் என பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, சினிமா பிரபலங்களுக்கே அதிர்ச்சி அளித்தார் TTF வாசன்.

அந்த திரைப்படத்திற்கு மஞ்சள் வீரன் என திரைப்படக் குழு பெயரிடப்பட்டது. இதன் பிறகு அவர் பேஸ்புக் லைவ் பேசிய பல வீடியோக்கள் கண்டன்டாக பரவி வந்தது. இந்தநிலையில், தன் ஒருபுறம் பல லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களில் யூடியூப்பிற்காக வீடியோ போடுவதை நிறுத்தாமல் செய்து வருகிறார்.

அந்த வகையில் சென்னையில் இருந்து மகாராஷ்டிராவிற்கு ஹயபுசா என சொல்லக்கூடிய ( SUZUKI) நிறுவனத்தைச் சேர்ந்த 35 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்பொழுது, மழை காரணமாக காஞ்சிபுரத்தில் தங்கிய வாசன் தனது ரசிகர்களையும் சந்தித்து இருக்கிறார். வழி எங்கும் அவரது ரசிகர்கள் வீடியோவை, எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்த நிலையில், மழை நின்ற பிறகு காஞ்சிபுரத்திலிருந்து மீண்டும் தனது பயணத்தை துவங்கி இருக்கிறார் TTF வாசன்.

இந்தநிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட, தாமல் என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது சாகசம் செய்ய முயன்ற TTF வாசன் தனது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது.

விபத்தின் போது காயமடைந்த TTF வாசன் கையில் எலும்பு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள் காயங்களுடன் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று வந்த TTF வாசன் மாவு கட்டு போடப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு செல்வதாக கூறி அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

 இப்படி ஒரு கோர விபத்து நடைபெற்ற போதிலும் வாசன் பெரும் காயங்கள் இன்றி சிறு காயங்களுடன் உயிர்த்தப்பியது குறிப்பிடத்தக்கது. அவருடைய நண்பர்கள் TTF வாசன் அணிந்திருந்த உடையின் மதிப்பே இலட்சக்கணக்கில் இருக்கும் என்பதால், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருப்பதாகவும் கூறினர்.


 விநாயகா் சிலைகள் செய்ய கட்டுப்பாடுகள் என்னென்ன? மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

விநாயகா் சிலைகள் தயாரிப்புக்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களையே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தியை ஒட்டி, தமிழகத்தில் ஆங்காங்கே சிலைகள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்படும் சிலைகள் நீா் நிலைகளில் கரைக்கப்படும். இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நெறிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும்.

விநாயகா் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தொ்மாகோல் ஆகியவற்றைக் கலக்காமல் சிலைகளைத் தயாரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களைக் கொண்டு மட்டுமே விநாயகா் சிலைகளைத் தயாரித்து நீா்நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகளில் ஆபரணங்களைத் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா்க் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை உபயோகிக்கலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதியில்லை.

வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு ரசாயனம் கலந்த சாயங்களை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீா் சாா்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 


மகளிா் உரிமைத் தொகை: இதுவரை விண்ணப்பிக்காதவா்களுக்கு வாய்ப்பு!

தமிழக அரசின் ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பம் செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் மேல் முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 1.06 கோடி போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிப்புக்கு உள்ளானவா்கள், மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, மகளிா் உரிமைத் தொகைக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாதவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கென இணைய சேவை மையங்களில் வசதி செய்யப்பட உள்ளது. இந்த வசதியை வரும் 18-ஆம் தேதிமுதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்களை இணையதளம் வழியாகவே கோட்டாட்சியா்கள் பரிசீலிப்பா். கைப்பேசி குறுஞ்செய்தி வந்த நாளில் இருந்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும், மேல்முறையீட்டு பரிசீலனையை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டுமெனவும் தமிழக அரசின் சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


 ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.70 உயர்வு!

ஆவின் நெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.70, அரை லிட்டருக்கு ரூ. 50 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்தது.

ஆவின் நிர்வாகம் பால், நெய், வெண்ணெய் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றது.

இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் நெய் மற்றும் வெண்ணெய் விலையை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, 15 மில்லி நெய் பாக்கெட் ரூ. 14-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ. 15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 மில்லி பாக்கெட் ரூ.70-ல் இருந்து ரூ.80-ஆகவும், 500 மில்லி லிட்டர் பாட்டில் ரூ.315-ல் இருந்து ரூ.365-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630-ல் இருந்து ரூ.700-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அரை கிலோ வெண்ணெய் விலை ரூ.275-ஆக விற்பனை செய்யப்படுகிறது.


 சனாதனம் என்றால் என்ன என்று, தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

 தமிழக அரசின் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 அறவியலும், இந்திய பண்பாடும் என்ற பாட புத்தகத்தின் 58வது பக்கத்தில் இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம் +து எனப்பிரிக்கலாம். ஹிம் ஹிம்சையில், து துக்கிப்பவன் எனப் பொருள்படும்.

ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது வருந்தினால், அந்த துயரத்தை தனக்கு ஏற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அந்த பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.

இந்து சமயம், சனாதன தர்மம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தர்மம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் எனப்படும்.

இது வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் வேதசமயம் என்றும் வேதநெறிகளையும், சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்து சமயத்தின் அடிப்படை கோட்பாடு கடவுளை அடைவதாகும்.

 எல்லாவற்றையும் விட இவர் மேலானவராக இருப்பதால் கடவுளை பரம்பொருள் என்று இந்து சமயம் கூறுகிறது. இவ்வாறு அந்த பாடத்தில் சனாதன தர்மம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.


 மகளிர் உரிமை தொகை .. உங்க வங்கி கணக்கில் ரூ.1 வந்திருக்கா? யாருக்கெல்லாம் 1000 ரூபாய்?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடைசி கட்டத்துக்கு வந்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது தமிழக பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 மாதம் தோறும் அளிக்கும் கலைஞர் உரிமை தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ம் தேதி முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது .

மொத்தம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமை திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் விண்ணப்பம் அதற்கான உரிய காரணம் செய்யப்பட்ட நிராகரிக்கப்பட்டவர்களுக்கு பதிவு மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் ஆக அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தெரிவித்து இருந்தது .

இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு எஸ்எம்எஸ் அனுப்பும் பணிகள் நடந்து வருவதாக தேர்வு செய்த பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளுக்கு சோதனை கீழ் அடிப்படையில் , குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது .

பயனாளிகள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி முலம் அனுப்படவுள்ளதாகவும் , பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ .1 செலுத்தி நேரடியாக வரவு வைக்கப்படுகிறதா என்பது சோதிக்கப்படவுள்ளது . ரூபாய் ஒரு அனுப்பியவுடன் , விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது .

தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக் கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு அனுப்பப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தன .

ரூபாய் வட்டாரங்கள் மேலும் கைப்பேசி வழியாக விண்ணப்பதாரர்களைத் தொடர்பு கொண்டும் வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன . 


 தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது: சித்தராமையா

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். 

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டுக்கும் காவிரிக்கும் இடையே பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடகம் தர மறுப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வருகிறது. 

இந்நிலையில் காவிரி நீர் பிரச்னைகளுக்காக அமைக்கப்பட்ட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 86-ஆவது கூட்டம் குழுவின் தலைவா் வினித் குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், காவிரியில் அடுத்த 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட பரிந்துரை செய்தது. 

இந்நிலையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று(புதன்கிழமை) பிற்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. 

கூட்டம் முடிந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, மழை இல்லாததால் கர்நாடகம் தீவிர தண்ணீர் பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம். மேலும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடமும் மனு அளிக்கவிருக்கிறோம். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பேசுவார்கள். பிரதமர் மோடிக்கும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமும் முறையிடுவோம்.

கர்நாடகத்தின் தண்ணீர் தேவையைப் போக்கவே 70 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. எங்களிடம் 53 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழல் இல்லை' என்று தெரிவித்தார். 


மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா?-விபரம் 

வரும் 15ம் தேதி முதல், விண்ணப்பதாரர்களின் தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்

கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருந்தவர்களும் விண்ணப்பித்ததால் நிராகரிப்பு

இதையும் படிக்க :மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.06 கோடி பேர்: முதல்வர் அறிவிப்பு - முழு விவரம்

வீட்டில் 3600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் மகளிரின் விண்ணங்களும் நிராகரிப்பு

₨2.5 லட்சத்துக்கு அதிக வருமானம், அரசு வேலையில் உள்ளோரின் விண்ணப்பங்களும் நிராகரிப்பு


 கோவில்பட்டி அருகே பட்டியலின மாணவர் மீது தாக்குதல்!

கோவில்பட்டி அருகே கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில்  பட்டியலின மாணவர் ஹரி பிரசாத் மீது  சக மாணவர்கள் 10 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில்  11 ஆம் வகுப்பு  படித்து வரும் மாணவர்கள் இருவருக்கு இடையே சிறிய பிரச்னைகள் இருந்து வந்துள்ளது.  

இந்நிலையில் அந்தப் பிரச்னைகள் அனைத்தும் சாதி ரீதியான மோதலாக மாறி வியாழக்கிழமை (ஆக.17) பிற்பகல் இருவருக்கும் இடையே பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அதில் ஒருவரின் நண்பரான  11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஹரி பிரசாத் விலக்கி விட்டுள்ளார். 

அப்போது,  பட்டியல் இனத்தைச் சேர்ந்த நீ எப்படி எங்கள் விஷயத்தில் தலையிடலாம்  என ஹரி பிரசாத் மீது அந்த இரு மாணவரில் ஒருவர் பிரச்னை செய்து உள்ளார். அதன்பிறகு பள்ளி வேலை நேரம் முடிந்து வழக்கம்போல அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், ஹரி பிரசாத்திடன் பிரச்னை செய்த மாணவர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் மோட்டார் பைக்குகளில் மாணவர் ஹரி பிரசாத்தின் சொந்த ஊரான லட்சுமிபுரத்துக்கு வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சென்று  ஹரி பிரசாத்தின் வீடு எங்கே உள்ளது என விசாரித்து உள்ளனர்.

இதனிடையே மாணவர் ஹரி பிரசாத் லட்சுமிபுரத்தில் உள்ள கோயில்  திடல் அருகே சென்று கொண்டிருந்ததை பார்த்த அந்த கும்பல் ஹரி பிரசாத்தை சுற்றி வளைத்து சாதியைச் சொல்லித் திட்டி சரமாரியாக தாக்கி காயப்படுத்தி விட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்று தலைமறைவாகினர். 

இந்த தகவலை  அறிந்த  மாணவர் ஹரி பிரசாத்தின் பெற்றோர் காயமடைந்த ஹரி பிரசாத்தை உடனடியாக அங்கிருந்து மீட்டு கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

மாணவர் ஹரி பிரசாத்துக்கு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நாங்குநேரியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவரும், அவரது தங்கையும் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை போல, அதே மாதிரியான மற்றுமொரு சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரங்கேறியிருப்பது கல்வித் துறை வட்டாரத்திலும், காவல் துறை வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக கழுகுமலை காவல் நிலைய காவல் துறையினர் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

முதற்கட்டமாக  ஹரி பிரசாத்தை தாக்கிய மாணவர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் தலையில் தொங்கும் ஊழல் கத்தி!

- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்

இரண்டாம் படை வீடாம் திருச்செந்துாரில் பாதயாத்திரையின் 16வது நாளை நிறைவு செய்திருப்பது, பெருமைக்குரியது. அநீதியையும், அக்கிரமத்தையும், அடாவடியையும், அராஜகத்தையும் செய்த அசுரர்களை அடியோடு அழித்து, வெற்றி கொண்ட இந்த திருச்செந்துார் மண், நம் நோக்கத்திற்கும், பாதயாத்திரைக்கும் பலம் சேர்க்கிறது.

திருச்செந்துார் முருகன் கோவிலில், கடவுளுக்கு நேர்ந்து பசு மாடு அளிப்பர். தணிக்கை அறிக்கையில், 5,309 மாடுகளை காணவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் மாட்டைக் கொடுத்த பதிவுகள் இருக்கின்றன; ஆனால், மாடுகளை காணவில்லை.

மாடுகளை திருடி, தி.மு.க.,வினருக்கு விற்று விட்டனரா? 'கிணற்றை காணவில்லை' என வடிவேலு கதறுவதுபோல, திருச்செந்துார் கோவிலில் மாடுகளை காணவில்லை.

திருச்செந்துார் அருகே உள்ள ஆத்துார், வெற்றிலை சாகுபடிக்கு பெயர் பெற்றது. அதிக காரத்தன்மை மற்றும் செரிமான சக்தியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது.

இந்த வெற்றிலைக்கு கடந்த ஏப்ரலில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது, திருச்செந்துாருக்கு கிடைத்த பெருமை.

திருச்செந்துார் அமலி நகர் பகுதி மீனவர்களுக்கு துாண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு, 2022ம் ஆண்டு சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. இப்பணிகள், இதுவரை துவங்கப்படவில்லை. அறிவிப்பு வெளியாகி விட்டால், தானாகவே பாலம் வந்து விடுமா?

கடந்த ஒரு வாரமாக, இந்த மீனவர்கள் போராடி வருகின்றனர். இது மட்டும் அல்ல; மீனவர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதி எதையுமே, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் வழங்குவோம் என்று சொன்னீர்களே?


மீன்பிடி தடை கால நிவாரணமாக, 8,000 ரூபாய் வழங்குவோம் என்று சொன்னீர்களே?

புதிய மீன்வள கல்லுாரிகள், மீனவர் பகுதியில் புதிய பள்ளிகள் காட்டுவோம் என்று சொன்னீர்களே; இவையெல்லாம் என்ன ஆயின?

இந்தியாவின் கடலோர மாநிலங்களில் மீன் உற்பத்திக்காக, 26,050 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது, மத்திய அரசு. தமிழகத்துக்கு 2021 முதல் 2023 வரை, 617 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

மீனவ உள்கட்டமைப்பு நிதி மற்றும் 'மத்சய சம்பதா' திட்டம் இணைத்து, இதுவரை 1,356 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 457 மீனவர்கள் பயன் அடைந்துள்ளனர்

தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்க, 1,464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 42,458 மீனவர்களுக்கு 'கிசான் கடன்' அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவை அத்தனையும், மீனவர்கள் நலனுக்காக பிரதமர் மோடி செய்தது.

தமிழகத்தில் ஆட்சியில் இருப்போர், மீனவர்களுக்கு ஒரு நன்மையையும் செய்யாத கூட்டம். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த கூட்டம்.

காங்கிரஸ் -- தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 85 தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டபோது, கைகட்டி வேடிக்கை பார்த்த கூட்டம். பல தலைமுறைகளுக்கு நன்மை செய்த, 'என் மகன்... என் பேரன்...' என்று வேண்டுமானால் மாநாடு நடத்துங்கள்.

வரும் 17ல், ஸ்டாலின் புகழ் பாடும் இந்தப் போலி மாநாட்டிற்கான திடல் அமைக்க, மணல் கடத்திஉள்ளனர், தி.மு.க.,வினர்.

நேற்று முன்தினம், ராமநாதபுரத்தில் நடந்த இந்த சம்பவத்தை உடனடியாக தடுத்து நிறுத்தியது, பா.ஜ., சொந்தங்கள்.

'அமலாக்கத் துறை செயல்பாட்டுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்' என்று வாய்ச்சவடால் விடும் அமைச்சர் தான் அனிதா ராதாகிருஷ்ணன். 2001- - 2006 காலகட்டத்தில், இவர் அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, 4.9 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, இவர் மீது 2006ல் வழக்குப் பதியப்பட்டது; 2009ல் தி.மு.க.,வில் 'சரண்டர்' ஆகிட்டார்.

இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு உதவிட, அமலாக்கத் துறை முன்வந்தது; ஆனால், அதை ஏற்க மறுத்துள்ளது, லஞ்ச ஒழிப்புத் துறை. வழக்கை சந்திக்க, அமைச்சர் ஏன் பயப்படுகிறார்?

அளவுக்கு அதிகமா சேர்த்தது, 4.9 கோடி என்பது, 4,999 கோடி ரூபாய் என்ற உண்மை வெளியே வந்து விடும் என்பதாலா?

கடந்த, 2020, டிச., 31ல், அனிதா முன்னிலையில் பொது வெளியில் பேசிய, தி.மு.க., நிர்வாகி உமரி சங்கர், 'இந்த ஊரில் இரண்டாம் பெரிய பணக்காரர் அனிதா ராதாகிருஷ்ணன். அவரிடம் 4,999 கோடி ரூபாய் சொத்து உள்ளது' என்று உண்மையை சொல்லி விட்டார்.

அமலாக்கத் துறை, ஏற்கனவே இவருடைய 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளது. இன்னும் 4,992 கோடி சொத்துக்கள் பாக்கி இருக்கின்றன. அனிதா ராதாகிருஷ்ணன் தலையில் ஊழல் கத்தி தொங்குகிறது.

பலியாக்காதீர்

தி.மு.க.,விடம் ஒரே ஒரு கேள்வி. ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்கும் நீங்கள், தமிழகத்திற்கு எத்தனை மருத்துவக் கல்லுாரிகள் கொண்டு வந்தீர்கள்?


 சுதந்திர நாள்: கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார் முதல்வா் ஸ்டாலின்

நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார்.

தேசியக் கொடியேற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக மக்களுக்கு சுதந்திர நாள் உரை நிகழ்த்திவருகிறார்.

இதையும் படிக்க :டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

தமிழக அரசு சாா்பில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றினார்.


சுதந்திர நாள் விழாவில் பங்கேற்க வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை, போா் நினைவுச் சின்னத்தில் இருந்து சென்னை மாநகரக் காவல் துறையினா், மோட்டாா் சைக்கிள்கள் மூலமாக அணிவகுத்து அழைத்து வந்தனர்

கோட்டை கொத்தளத்துக்கு முன்பாக ராஜாஜி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேடை அருகே வந்திறங்கிய அவரை, பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வரவேற்றார்.

தென்பிராந்திய தலைமை படைத் தலைவா், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப் படைத்தள அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல் படை ஐ.ஜி., தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலா் அறிமுகம் செய்துவைத்தார்.

பின்னா், காவல் துறையினா், முப்படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வா் ஏற்றுக்கொண்டார். தொடா்ந்து, கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல்வா் ஸ்டாலின் மூவண்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது மூவண்ணத்தில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. காவல் இசைக் குழுவினா் தேசிய கீதத்தை இசைத்தனர்.


 சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளியின் விலை மாற்றமின்றி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விளைவாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். தமிழக அரசு தக்காளி விலை உயா்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக நியாயவிலைக் கடைகள், 67 பண்னை பசுமைக் கடைகள் மூலமாக தக்காளி கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்து வருகிறது.

இதையும் படிக்க :குழந்தைகள் பால் அதிகம் அருந்துவதால் ரத்த சோகை ஏற்படும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இந்த நிலையில், ஆக.2-ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் படிப்படியாக விலை குறைந்து வந்த நிலையில் இன்று(ஆக.6)  ஒரு கிலோ நாட்டுத் தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


 தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி தென்மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராகவும், ஐபிஎஸ் அதிகாரி பிரஜ் கிஷோர் ரவி லஞ்சஒழிப்புத்துறை டிஜிபியாகவும், அபின் தினேஷ் மோடக் மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபியாகவும், வன்னிய பெருமாள் சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க :இந்தியா பெயரை பயன்படுத்த எதிர்ப்பு: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மேலும் ராஜீவ் குமார் சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாகவும், பாலநாகதேவி பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாகவும், ஐபிஎஸ் அதிகாரி காமினி திருச்சி காவல் ஆணையராகவும், திருச்சி காவல் ஆணையராக இருந்த சத்தியப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும், ஐபிஎஸ் அதிகாரி லோகநாதன் மதுரை காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

முழு விவரம் 

 


திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சிக்கு இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் இன்று மாலை கலந்து கொண்டு பேசினார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு திடீரென்று சென்ற முதல்வர் ஸ்டாலின், நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக, நகர்ப்புற நலவாழ்வு மையத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள கோப்புகளை ஆய்வு செய்தார்.