Articles by "அரசியல்"
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.06 கோடி பேர்: முதல்வர் அறிவிப்பு - முழு விவரம்!

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை, அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பா் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

இந்தத் திட்டத்துக்கான இறுதிக்கட்ட ஆலோசனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று(திங்கள்கிழமை) நடைபெற்றது. 

கூட்டத்தில் பேசிய முதல்வர், இந்த திட்டத்தில் இணைய 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளதாகவும் அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறினார். 

கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழாவானது வருகிற 15-ஆம் நாள் காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் - ஆயிரம் ரூபாயை மாதாமாதம் - ஆண்டு தோறும் பெறப் போகிறார்கள்.

அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும் அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதனை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் பொறுப்பும் கடமையும் அதிகாரிகளாகிய உங்களுக்கு இருக்கிறது.

ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பதால் கிடைக்கின்ற பாராட்டு, ஒரு கோடி பாராட்டுகளுக்குச் சமம். 

அதேபோல்தான் சிறு தவறு நடந்துவிட்டால் அதனால் கெட்டபெயரும் கிடைக்கும் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

எனவே எந்த இடத்திலும் - எந்தச் சூழலிலும் - எந்த ஒரு தனிநபருக்கும் சிறு தவறு கூட நடந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லி வருவதை, தற்போதும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்.

ஏ.டி.எம். கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது, அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல், வரும் 15-ஆம் தேதி, என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll-Free எண்ணும் சேர்க்கப்பட வேண்டும்.

இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்.

அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும்.

அப்படி அனுப்பினால் பெரும்பாலானவர்கள் மனநிறைவு அடைவார்கள்.

சிலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம் - மறுபடியும் நம்மிடம் விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பை

நாம் வழங்க வேண்டும். வாய்ப்பை வழங்கினால் பொதுமக்களுக்கு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும்.

வருகிற 15-ஆம் நாள் அன்று மாவட்டத் தலைநகரங்களில் இதற்கான விழா நடக்க இருக்கிறது. பணம் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக வருவார்கள். பணம் கிடைக்காத மகளிர் யாராவது அந்த இடத்துக்கு வந்து கேட்டால், பதில் சொல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

தனியாக இதற்கென அலுவலர்களை உட்கார வைத்து, இப்படி கேட்க வரும் மகளிரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, 'நாங்கள் பரிசீலிக்கிறோம்' என்பதைச் சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். இது மிகமிக முக்கியமாகும்.

இதைச் செய்யாவிட்டால், ஏதாவது ஒரு இடத்தில் பிரச்சினை என்றாலும், அது மாநிலம் முழுவதும் பெரிய செய்தியாக மாறிவிடும்.

மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும், இந்த திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கும் வங்கிகளுக்கும் - வங்கிகளுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பு சீராக அமைந்து வருகிறதா என்பதை மாதம் தோறும் கண்காணிக்க வேண்டும்.

மாதத்தில் முதல் ஒருவார காலம் இந்த திட்டத்துக்காக தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் மாபெரும் திட்டம் இது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதம் தோறும் பயனடையும் திட்டம் இது. எனவே, இத்திட்டம் குறித்து தொடர்ந்து நாம் மக்களிடம் எடுத்துச்சொல்லி வர வேண்டும்.

* மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்

* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

* புதுமைப் பெண் திட்டம் மூலம்


 திருப்பதி: வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம் 

திருப்பதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. 

பக்தர்கள் எந்தவிதமான இடையூறும் இன்றி திருப்பதிக்கு வந்து செல்கின்றனர். இருப்பினும், ஆந்திர மாநிலத்தில் முழுஅடைப்பு அறிவிப்பால் திருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறைந்து காணப்படுகிறது. ரூ. 371 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை விஜயவாடா அழைத்து வந்து சிஐடி போலீஸாா் 10 மணி நேர விசாரணையை மேற்கொண்டனா்.

இதையும் படிக்க :ஆந்திரம்: சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம்

பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு முன்பாக, விஜயவாடா அரசு பொது மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். அங்கு அவருக்கு ஒரு மணி நேரம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் அவரை ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், ‘விசாரணைக்கு அவா் ஒத்துழைக்கவில்லை’ என அறிக்கை சமா்ப்பித்தனா். 

அதைத் தொடா்ந்து, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராஜமுந்திரியில் உள்ள மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்து ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளனர். இதையொட்டி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. 

முழுஅடைப்பு காரணமாக ஆந்திர மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதோடு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆட்டோக்கள், பேருந்துகள் என எதுவும் இயங்கவில்லை. இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகின்றன.


 ஆந்திரம்: சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம்

சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திரத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 

ரூ. 371 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை விஜயவாடா அழைத்து வந்து சிஐடி போலீஸாா் 10 மணி நேர விசாரணையை மேற்கொண்டனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு முன்பாக, விஜயவாடா அரசு பொது மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். அங்கு அவருக்கு ஒரு மணி நேரம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க :திருப்பதி: வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்!

அதைத்தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் அவரை ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், ‘விசாரணைக்கு அவா் ஒத்துழைக்கவில்லை’ என அறிக்கை சமா்ப்பித்தனா். அதைத் தொடா்ந்து, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராஜமுந்திரியில் உள்ள மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்து ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளனர். இதையொட்டி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. முழுஅடைப்பு காரணமாக ஆந்திர மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதோடு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 

மேலும் ஆட்டோக்கள், பேருந்துகள் என எதுவும் இயங்கவில்லை. இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகின்றன.

இதனிடையே முழுஅடைப்பையொட்டி இன்று ஆந்திரத்தில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சித்தூர் மாவட்டத்தில் சாலையில் டயர்களை கொளுத்தி தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சந்திரபாபு நாயுடுவின் கைதைக் கண்டித்து திருப்பதி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

இருப்பினும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.


 அதிமுக மாநாடு: மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

மதுரையில் அதிமுக மாநாட்டையொட்டி இன்று நாள் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.

மதுரை வலையங்குளம் கருப்புசாமி கோயில் அருகே அதிமுக மாநாடு நடைபெறவுள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், பிற மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலூர் வழியாக மாநாட்டிற்கு வரக்கூடிய அதிமுகவினரின் வாகனங்கள் மாநகருக்குள் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேபோன்று, திண்டுக்கல் வழியாக வருபவர்கள் தனிச்சியம், துவரிமான் வழியாக கப்பலூர் செல்ல வேண்டும் எனவும்

உசிலம்பட்டி வழியாக வரும் வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டையில் இருந்து காப்பலூர் செல்ல வேண்டும் என்றும் காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


"இந்திய மண்ணில் சனாதன சக்திகளுக்கு இனி இடம் கிடையாது!" -திருமாவளவன்

மணி விழாவில், தொல்.திருமாவளவன் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 60-ம் ஆண்டு நிறைவு விழா, மணி விழாவாக சென்னை தேனாம்பேட்டையில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சத்யராஜ், கவிஞர்கள் அறிவுமதி, பழனிபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் ம.சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., ரவிக்குமார் எம்.பி., துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்பட மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் தொல்.திருமாவளவன் கவிதை நடையில் பேசியதாவது:-

இந்தியா கூட்டணி வெல்லும்

நாங்கள் சாதிய அடையாளம் தேடி அலைவோர் அல்ல. சாதி, மத, இனத்தில் அடையாளம் தேடுவோர் அல்ல. அம்பேத்கர் கட்டமைக்க விரும்பிய ஜனநாயக, சமத்துவ இந்தியாவை கட்டமைக்க கால் நூற்றாண்டாய் களமாடும் விடுதலை சிறுத்தைகள் நாங்கள். ஆண்ட வம்சமல்ல நாங்கள், கவுதம புத்தர் வழிவந்த ஞானவம்சம்.

தேர்தல் வெற்றிக்காக சூதாடும் அரசியல்வாதிகள் நாங்கள் அல்ல. ஆயிரம் ஆண்டுகளாக விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக போராடும் அம்பேத்கரின் பிள்ளைகள்.

இதையும் படிக்க: ரூபாய் 13,000 கோடி செலவில் பிரதமரின் விஸ்வகர்மா என்ற புதிய திட்டம்!

நஞ்சை பரப்பும் சனாதன சக்திகளை நடுங்க வைக்கும் பெரும்படையாய் தமிழ்நாட்டில் வீறுநடை போடும் நாங்கள் பெரியாரின் பேரப்பிள்ளைகள். சங்கத்தமிழ் விளைந்த எங்கள் தமிழ் மண்ணில் சனாதன சக்திகளுக்கு இடம் கிடையாது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் இடமில்லை. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் இணைந்து அணிசேர்ந்தோம். இந்தியாவாக, இந்தியா கூட்டணியாக ஒருங்கிணைந்தோம். அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி எழுந்தோம். ஆட்சி பீடத்தில் இருந்து சனாதனத்தை விரட்டி அடிப்போம். இந்தியா வெல்லும், இந்தியா கூட்டணி வெல்லும், ஜனநாயகம் வெல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கவியரங்கு

அதனைத் தொடர்ந்து மணிவிழா மலர் வெளியிடப்பட்டது. இந்த மலர் விழா மேடைக்கு பல்லக்கில் வைத்து கொண்டுவரப்பட்டது. இதனை நல்லக்கண்ணு வெளியிட, முதல் பிரதியை கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

முன்னதாக சினிமா பாடல் ஆசிரியர் கபிலன் தலைமையில் கவியரங்கு நடந்தது. இதில் தி.மு.க.வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் தலையில் தொங்கும் ஊழல் கத்தி!

- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்

இரண்டாம் படை வீடாம் திருச்செந்துாரில் பாதயாத்திரையின் 16வது நாளை நிறைவு செய்திருப்பது, பெருமைக்குரியது. அநீதியையும், அக்கிரமத்தையும், அடாவடியையும், அராஜகத்தையும் செய்த அசுரர்களை அடியோடு அழித்து, வெற்றி கொண்ட இந்த திருச்செந்துார் மண், நம் நோக்கத்திற்கும், பாதயாத்திரைக்கும் பலம் சேர்க்கிறது.

திருச்செந்துார் முருகன் கோவிலில், கடவுளுக்கு நேர்ந்து பசு மாடு அளிப்பர். தணிக்கை அறிக்கையில், 5,309 மாடுகளை காணவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் மாட்டைக் கொடுத்த பதிவுகள் இருக்கின்றன; ஆனால், மாடுகளை காணவில்லை.

மாடுகளை திருடி, தி.மு.க.,வினருக்கு விற்று விட்டனரா? 'கிணற்றை காணவில்லை' என வடிவேலு கதறுவதுபோல, திருச்செந்துார் கோவிலில் மாடுகளை காணவில்லை.

திருச்செந்துார் அருகே உள்ள ஆத்துார், வெற்றிலை சாகுபடிக்கு பெயர் பெற்றது. அதிக காரத்தன்மை மற்றும் செரிமான சக்தியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது.

இந்த வெற்றிலைக்கு கடந்த ஏப்ரலில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது, திருச்செந்துாருக்கு கிடைத்த பெருமை.

திருச்செந்துார் அமலி நகர் பகுதி மீனவர்களுக்கு துாண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு, 2022ம் ஆண்டு சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. இப்பணிகள், இதுவரை துவங்கப்படவில்லை. அறிவிப்பு வெளியாகி விட்டால், தானாகவே பாலம் வந்து விடுமா?

கடந்த ஒரு வாரமாக, இந்த மீனவர்கள் போராடி வருகின்றனர். இது மட்டும் அல்ல; மீனவர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதி எதையுமே, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் வழங்குவோம் என்று சொன்னீர்களே?


மீன்பிடி தடை கால நிவாரணமாக, 8,000 ரூபாய் வழங்குவோம் என்று சொன்னீர்களே?

புதிய மீன்வள கல்லுாரிகள், மீனவர் பகுதியில் புதிய பள்ளிகள் காட்டுவோம் என்று சொன்னீர்களே; இவையெல்லாம் என்ன ஆயின?

இந்தியாவின் கடலோர மாநிலங்களில் மீன் உற்பத்திக்காக, 26,050 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது, மத்திய அரசு. தமிழகத்துக்கு 2021 முதல் 2023 வரை, 617 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

மீனவ உள்கட்டமைப்பு நிதி மற்றும் 'மத்சய சம்பதா' திட்டம் இணைத்து, இதுவரை 1,356 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 457 மீனவர்கள் பயன் அடைந்துள்ளனர்

தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்க, 1,464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 42,458 மீனவர்களுக்கு 'கிசான் கடன்' அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவை அத்தனையும், மீனவர்கள் நலனுக்காக பிரதமர் மோடி செய்தது.

தமிழகத்தில் ஆட்சியில் இருப்போர், மீனவர்களுக்கு ஒரு நன்மையையும் செய்யாத கூட்டம். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த கூட்டம்.

காங்கிரஸ் -- தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 85 தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டபோது, கைகட்டி வேடிக்கை பார்த்த கூட்டம். பல தலைமுறைகளுக்கு நன்மை செய்த, 'என் மகன்... என் பேரன்...' என்று வேண்டுமானால் மாநாடு நடத்துங்கள்.

வரும் 17ல், ஸ்டாலின் புகழ் பாடும் இந்தப் போலி மாநாட்டிற்கான திடல் அமைக்க, மணல் கடத்திஉள்ளனர், தி.மு.க.,வினர்.

நேற்று முன்தினம், ராமநாதபுரத்தில் நடந்த இந்த சம்பவத்தை உடனடியாக தடுத்து நிறுத்தியது, பா.ஜ., சொந்தங்கள்.

'அமலாக்கத் துறை செயல்பாட்டுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்' என்று வாய்ச்சவடால் விடும் அமைச்சர் தான் அனிதா ராதாகிருஷ்ணன். 2001- - 2006 காலகட்டத்தில், இவர் அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, 4.9 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, இவர் மீது 2006ல் வழக்குப் பதியப்பட்டது; 2009ல் தி.மு.க.,வில் 'சரண்டர்' ஆகிட்டார்.

இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு உதவிட, அமலாக்கத் துறை முன்வந்தது; ஆனால், அதை ஏற்க மறுத்துள்ளது, லஞ்ச ஒழிப்புத் துறை. வழக்கை சந்திக்க, அமைச்சர் ஏன் பயப்படுகிறார்?

அளவுக்கு அதிகமா சேர்த்தது, 4.9 கோடி என்பது, 4,999 கோடி ரூபாய் என்ற உண்மை வெளியே வந்து விடும் என்பதாலா?

கடந்த, 2020, டிச., 31ல், அனிதா முன்னிலையில் பொது வெளியில் பேசிய, தி.மு.க., நிர்வாகி உமரி சங்கர், 'இந்த ஊரில் இரண்டாம் பெரிய பணக்காரர் அனிதா ராதாகிருஷ்ணன். அவரிடம் 4,999 கோடி ரூபாய் சொத்து உள்ளது' என்று உண்மையை சொல்லி விட்டார்.

அமலாக்கத் துறை, ஏற்கனவே இவருடைய 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளது. இன்னும் 4,992 கோடி சொத்துக்கள் பாக்கி இருக்கின்றன. அனிதா ராதாகிருஷ்ணன் தலையில் ஊழல் கத்தி தொங்குகிறது.

பலியாக்காதீர்

தி.மு.க.,விடம் ஒரே ஒரு கேள்வி. ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்கும் நீங்கள், தமிழகத்திற்கு எத்தனை மருத்துவக் கல்லுாரிகள் கொண்டு வந்தீர்கள்?


 மோடியின் குடும்பம் இந்தியா; வீடு செங்கோட்டை: கார்கேவுக்கு தம்பிதுரை பதில்

பிரதமர் நரேந்திர மோடி அடுத்தாண்டு வீட்டில்தான் கொடியேற்றுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு அதிமுக எம்பி தம்பிதுரை பதிலளித்துள்ளார்.

தில்லி செங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றிய பிறகு பேசிய பிரதமர் மோடி, மக்களின் நம்பிக்கையைப் பெற்று அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது செங்கோட்டையில் இருந்து உரையாற்றுவேன் என்றார்.

இதனை விமர்சித்த கார்கே, பிரதமரின் இந்த கருத்து ஆணவத்தை வெளிக்காட்டுவதாகவும்; அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில்தான் தேசியக் கொடி ஏற்றுவாா் என்றும் கூறினாா்.

இந்நிலையில், அதிமுக எம்பி தம்பிதுரை செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில்,

பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. அவரின் குடும்பம் இந்தியாதான். செங்கோட்டைதான் அவரது வீடு. அதனால், அடுத்தாண்டு அவரது வீட்டில் கொடியேற்றுவார் என்று கார்கே கூறியது சரிதான்.” என்று தெரிவித்துள்ளார்.



காவிரியில் இருந்து தமிழகத்துக்கான உரிய நீரைத் திறந்து விட கா்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில்.

இதையும் படிக்க :காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுக: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

 ‘இந்தக் கோமாளிகளால் அவா்களின் சொந்தப் பிரச்னையையே தீா்த்துக்கொள்ள முடியாது’ என்று மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இரு குடும்ப அரசியல் கட்சிகளான காங்கிரஸும் திமுகவும் பிரதமா் நரேந்திர மோடியை வெறுப்பதாலேயே ஒன்றிணைந்துள்ளனா்.

தற்போது தங்களுடைய குடும்ப ஆட்சியை பாதுகாத்துக்கொள்வதற்காக, தங்களின் பிரச்னையைத் தீா்த்து வைக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதி நாடகமாடுகின்றனா்.

இந்தக் கோமாளிகளால் அவா்களின் சொந்தப் பிரச்னையையே தீா்த்துக்கொள்ள முடியாது.

வாக்காளா்கள்தான், தங்களுடைய பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கான வழி குறித்து சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.


 தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் தற்போதுள்ள குறுவை நெற்பயிரைக் காப்பாற்றிடவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும் ஏதுவாக காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில், காவிரி டெல்டா பகுதிகளில், குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் நெற்பயிரைக் காப்பாற்றுவதில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை எடுத்துரைத்து, காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆக 4) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல், தமிழ்நாடு, குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள், தென்மேற்கு பருவமழையின் போது மிகக் குறைவான மழைப்பொழிவைப் பெறுவதாகவும், குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப்பும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை

இதையும் படிக்க :இந்தியா பெயரை பயன்படுத்த எதிர்ப்பு: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

 குறிப்பாக கர்நாடகாவிலிருந்து வரும் நீரை மட்டுமே சார்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்வர், மாதாந்திர அட்டவணைப்படி, பிலிகுண்டுலுவில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளதாகவும், துரதிர்ஷ்டவசமாக, இந்த உத்தரவை கர்நாடகம் முழுமையாக மதிக்கவில்லை என்றும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கவில்லை என்றும் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

2023-2024 ஆம் ஆண்டில், 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளதாகவும், கர்நாடகாவில், 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி.-யில், 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு தற்போது உள்ள போதிலும்,

 கர்நாடக அரசு 28.8 டி.எம்.சி அளவிற்கு பற்றாக்குறையாக தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட்டுள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் தனது கடிதத்தில் புள்ளிவிவரங்களுடன் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

காவிரி டெல்டாவின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில், 2023, ஆகஸ்ட் 2 ஆம் நாளன்று நிலவரப்படி, 26.6 டி.எம்.சி. அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளதாகவும், இது குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ள முதல்வர்

குறுவை நெற்பயிர் முதிர்ச்சியடைந்து, அதிக மகசூல் பெற, இன்னும், 45 நாட்கள் தண்ணீர் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரிடம் கடந்த ஜூலை 5 மற்றும் 19 தேதிகளில் இப்பிரச்னையை எடுத்துச் சென்று, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த வினியோக அட்டவணையைக் கடைப்பிடிக்க கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறும், இதனை முறையாக கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தினை அறிவுறுத்துமாறும் வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், இருப்பினும்

கர்நாடக அரசு இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், முழுமையாக நிரம்பிய கபினி அணையில் இருந்து மட்டுமே தண்ணீரைத் திறந்து விட்டதாகவும், கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் 80 சதவிகிதம் அளவிற்கு நிரம்பியுள்ள சூழ்நிலையிலும், அவற்றிற்குத் தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ள சூழ்நிலையிலும், அந்த நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் ஏதும் திறக்கப்படவில்லை என்றும் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா, மாநிலத்தின் நெல் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்வதாகவும், ஏற்கெனவே அரிசித் தட்டுப்பாட்டால், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள தற்போதைய சூழலில், காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற வேண்டுமென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். 

அதோடு, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளபடி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவும் கர்நாடக அரசுக்கு பிரதமர் உரிய அறிவுரைகளை வழங்குவதோடு, இதனை உறுதி செய்வதற்குத் தேவையான அறிவுரைகளை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் வழங்கிட வேண்டுமென்று முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.


 திருச்சி: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் என்பதே இருக்காது. இந்த நிலைதான் பிற மாநிலங்களுக்கும் ஏற்படும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:

தமிழகத்தில் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அனைவருக்கும் பொதுவான ஆட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது.

மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம், பள்ளியில் காலை சிற்றுண்டித் திட்டம், விவசாய நலன் சார்ந்த திட்டம் என மக்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், சிலர் நம் மீது காழ்ப்புணர்வு கொண்டு பொய்ச் செய்திகளை பரப்பிக் கொண்டுள்ளனர். பொய்க்கு ஆயுசு குறைவு.

தேவையில்லாத பலவற்றை பேசி நம்மை திசை திருப்பும் முயற்சியில் ஆளுநர் செயல்படுகிறார். தேர்தல்வரை அவர் அப்படி பேசுவதே நமக்கு நல்லது.

பாஜக ஆட்சி தொடர்ந்தால், இந்திய அரசமைப்பு சட்டமே இனி இருக்காது. வரும் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதே முக்கியம். முன்பு குஜராத்தில் நடந்தது.

இப்போது, மணிப்பூரில் நடைபெறுகிறது. மணிப்பூரைப் போன்று வேறு மாநிலங்கள் உருவாகக் கூடாது. அதற்கு பாஜக வீழ்த்தப்பட வேண்டும். இந்தியாவின் கட்டமைப்பையே பாஜக சிதைத்துவிட்டது. இந்த நிலை இனியும் தொடரக் கூடாது. அதற்கு வரும் தேர்தலில் பாஜக-வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

திமுகவை வாரிசு கட்சி என தொடர்ந்து பிரதமர் மோடியும், பாஜக-வினரும் பிரசாரம் செய்கின்றனர். ஆமாம், நாங்கள் ஆரியத்தை வீழ்த்தும் திராவிடத்தின் வாரிசுகள். பெரியார், அண்ணா, கருணாநிதியின் வாரிசுகள். எனவே, நாங்கள் வாரிசுகள் என தைரியமாக கூறுகிறோம். பாஜக யாருடைய வாரிசு? பாஜக கோட்சேவின் வாரிசு என்பதை தைரியமாக சொல்ல இயலுமா?.

எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். சிபிஐ விசாரணைக்கு தடைக் கோரி நீதிமன்றம் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழல் குறித்து பிரதமர் பேசக் கூடாது.

ஊழல், முறைகேடுகளை காட்டி ஆட்சியை கலைத்துவிடுவோம் என மிரட்டியே அதிமுக-வை பாஜக அடிமையாக வைத்திருந்தது.

இதனால், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் நிலை உருவானது. தமிழகத்தின் உரிமைகளை கைவிட்ட அதிமுகவும், அதை காவு வாங்கிய பாஜகவும் கரம் கோர்த்து இன்று தேர்தல் களத்திற்கு வருகிறார்கள். தமிழகத்தில் அவர்களை வீழ்த்தியே ஆக வேண்டும்.

இந்தியாவைக் காப்பற்றப்போவது இந்தியா கூட்டணிதான். நாடும் நமதே. நாற்பதும் நமதே. இந்தியா வெல்லும். அதனை 2024 தேர்தல் சொல்லும் என்றார் முதல்வர்.