இயக்குனர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி


4வது நாள் வசூல்: வரலாறு படைத்த ஜவான்!!

இயக்குனர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில்  நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் நேற்று உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதையும் படிக்க :ரஜினியின் 171வது பட அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

ஞாயிற்றுக் கிழமை மட்டும் ரூ. 44.5 கோடி அளவுக்கு முன்பதிவு வாயிலாகவே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியது. சனி, ஞாயிறுகளில் கூடுதல் மக்கள் திரையரங்குகளை நோக்கி செல்வதால் 4வதுநாள் முடிவில் வசூல் ரூ.500 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.  

இந்நிலையில் படக்குழு 4வது நாள் முடிவில் ரூ. 520.79 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. வார இறுதியில் எந்தப் படமும் இவ்வளவு வசூலிக்கவில்லையெனவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

Axact

OneNews

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment: