சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 171வது படம் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 171வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 171வது பட அறிவிப்பை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி.
இப்படத்தை எழுதி இயக்குபவர் லோகேஷ் கனகராஜ்.
தலைவரின் 171வது படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.
ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்துடன் சன்பிக்சர்ஸ் மீண்டும் இணையவிருக்கிறது என்று வெளியிட்டிருக்கிறது.

Post A Comment:
0 comments:
கருத்துரையிடுக