நிலவுக்கு அருகே 100 கிலோ மீட்டா் அணுக்கப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலத்தை செலுத்தும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் புதன்கிழமை (ஆக.16) முன்னெடுக்கவுள்


 நிலவுக்கு 100 கி.மீ. தொலைவில் சந்திரயான்-3: இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆயத்தம்

சென்னை: நிலவுக்கு அருகே 100 கிலோ மீட்டா் அணுக்கப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலத்தை செலுத்தும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் புதன்கிழமை (ஆக.16) முன்னெடுக்கவுள்ளனா்.

வெற்றிகரமாக அது செயல்படுத்தப்பட்ட பிறகு அடுத்த 7 நாள்களில் நிலவில் லேண்டா் கலன் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது. அதன் சுற்றுப்பாதை தொலைவை படிப்படியாக குறைத்து விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனா்.

அதன்படி தற்போது குறைந்தபட்சம் 150 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 177 கி.மீ. தொலைவும் கொண்ட நிலவின் நெருக்கமான பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. அதற்கு அடுத்தகட்டமாக நிலவின் தரைப்பகுதிக்கும், விண்கலத்துக்குமான தூரத்தை 100 கி.மீ. ஆக குறைக்கும் பணிகள் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளன.

அதைத் தொடா்ந்து உந்து கலனில் இருந்து லேண்டா் சாதனம் விடுவிக்கப்பட்டு, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் அது தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Axact

OneNews

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment: